ரூ.8 ஆயிரம்- பொருட்கள் திருட்டு


ரூ.8 ஆயிரம்- பொருட்கள் திருட்டு
x

தஞ்சையில் கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.8 ஆயிரம்- பொருட்கள் திருடி சென்ற மா்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மகர்நோம்புச்சாவடி வண்டிக்கார தெருவை சேர்ந்த காளிதாஸ் மனைவி அமலா (வயது 37). இவர் தஞ்சை நாகை சாலையில் அம்பலகார தெருவில் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் கல்லாபெட்டியில் இருந்த ரூ.8 ஆயிரம் மற்றும் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை காணவில்லை. அப்போது தான் மர்மநபர்கள் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அமலா தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story