ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.14.24 லட்சம் அபேஸ்


ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.14.24 லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.14 லட்சத்து 24 ஆயிரம் அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.14 லட்சத்து 24 ஆயிரம் அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா குந்துகோட்டை பகுதியை சேர்ந்தவர் நாகபூஷன் (வயது 70). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். கடந்த 20.6.2022 அன்று இவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் தனியார் செல்போன் டவர் அமைக்க இடம் கொடுத்தால் மாதந்தோறும் ஒரு தொகை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு நாகபூஷன் பேசினார். அப்போது அவர்கள் செல்போன் டவர் அமைப்பதற்காக சில நடைமுறை செலவுகளுக்காக வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர். இதையடுத்து அவர்கள் கூறியபடி 3 வங்கிகளின் கணக்கிற்கு பல தவணைகளாக ரூ.14 லட்சத்து 24 ஆயிரத்தை நாகபூஷன் அனுப்பி வைத்துள்ளார்.

போலீசார் விசாரணை

பின்னர் அந்த செல்போன் எண்ணை ஓய்வு பெற்ற ஆசிரியர் தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாகபூஷன் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் பணம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story