மொபட்டில் முதியவர் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் அபேஸ்


மொபட்டில் முதியவர் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் அபேஸ்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் முதியவர் மொபட்டில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் முதியவர் மொபட்டில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பணம் அபேஸ்

ஓசூர் அருகே புனுகன்தொட்டியில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது70). சம்பவத்தன்று இவர் ஓசூரில் பழைய பெங்களூரு சாலையில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்தார். அங்குள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து முதியவர் ரூ.40 ஆயிரத்தை எடுத்து தனது மொபட்டில் வைத்தார்.

பின்னர் அவர் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வந்தார். அப்போது மொபட்டில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது. இது குறித்து, கோவிந்தன் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

வாலிபர் கைது

அப்போது அஞ்செட்டி பக்கமுள்ள அத்திதொட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (24) என்பவர் முதியவர் மொபட்டில் வைத்திருந்த பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story