கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
x

ஒரத்தநாடு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள சோழகன்கரை கிராமத்தில் முனியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உண்டியலை சம்பவத்தன்று மர்ம நபர்கள் உடைத்து பணத்தை திருடி சென்று விட்டனர். இந்த நிலையில் ஒரு நபர் கோவில் உண்டியலில் உடைத்து எடுக்கப்பட்ட பணத்தை அதே பகுதியில் கொடுத்து நோட்டாக மாற்ற முயன்றார். இதை அறிந்த கிராம மக்கள் அந்த நபரை பிடித்து அவரையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட உண்டியல் பணத்தையும் பாப்பாநாடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (வயது55) என்பதும் சம்பந்தப்பட்ட கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பாப்பாநாடு போலீசார் நாகராஜன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நாகராஜன் இதற்கு முன்பும் கோவிலில பணம் திருடிய வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story