விநாயகர் கோவில் உண்டியலில் பணம் திருட்டு


விநாயகர் கோவில் உண்டியலில் பணம் திருட்டு
x

விநாயகர் கோவில் உண்டியலில் பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் ராஜயோக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே நுழைந்தனர். மேலும் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிவிட்டு தப்பியோடினர். இது தொடர்பாக கோவில் நிர்வாகி மாரியப்பன், புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கோவில் உண்டியல் கடந்த ஓராண்டிற்கு முன்பு திறக்கப்பட்டதாகவும், தற்போது உண்டியலில் ரூ.10 ஆயிரம் வரை இருந்திருக்கலாம். அவை திருட்டு போனதாக தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story