காரியாபட்டி பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பணம் திருட்டு
காரியாபட்டி பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பணத்தை திருடி சென்றனர்.
விருதுநகர்
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே கீழ உப்பிலிகுண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது 42). இவர் தனது குடும்ப செலவுக்காக காரியாபட்டி தனியார் பைனான்சில் நகையை வைத்து ரூ.90 ஆயிரம் பெற்றுள்ளார். இதில் ரூ. 50 ஆயிரத்தை ஒரு பையிலும், ரூ.40 ஆயிரத்தை மற்றொரு பையிலும் வைத்துக் கொண்டு அதில் ரூ. 2 ஆயிரம் மட்டும் எடுத்து வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கிவிட்டு ஊருக்கு செல்வதற்காக காரியாபட்டி பஸ் நிலையத்தில் பஸ் ஏறி உட்கார்ந்தார். பின்னர் டிக்கெட் எடுக்க பையிலிருந்த பணத்தை பார்த்தபோது ரூ. 38 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து பாண்டியம்மாள் அளித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story