தனியார் நிறுவனத்தில் பணம் திருட்டு


தனியார் நிறுவனத்தில் பணம் திருட்டு
x

தனியார் நிறுவனத்தில் பணத்தை திருடி சென்றனர்.

விருதுநகர்

சாத்தூர்,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கேசவன்நாராயணன் (வயது 47). இவர் சாத்தூர் உப்பத்தூர் விலக்கு அருகே தனியார் கார்பன் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வேலையை முடித்து விட்டு நிறுவனத்தில் உள் மேஜை மீது ரூ.5 ஆயிரத்தை வைத்துவிட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது பணத்தை காணவில்லை. இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story