கடையில் புகுந்த உடும்பு பிடிபட்டது


கடையில் புகுந்த உடும்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

போச்சம்பள்ளியில் கடையில் புகுந்த உடும்பு பிடிபட்டது

கிருஷ்ணகிரி

மத்தூர்:

போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் ஆட்டோ மொபைல்ஸ் கடையில் நேற்று காலை திடீரென உடும்பு ஒன்று புகுந்தது. இதனை கண்டு கடையின் உரிமையாளர் மற்றும் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள் கூச்சலிட்டனர். இதுகுறித்து போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து உடும்பை பிடித்து தொகரப்பள்ளி காப்புக்காட்டில் விட்டனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story