மருந்தகங்களில்கண்காணிப்பு கேமரா பொருத்த கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.


மருந்தகங்களில்கண்காணிப்பு கேமரா பொருத்த கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
x
தினத்தந்தி 17 Oct 2023 12:15 AM IST (Updated: 17 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மருந்தகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945-ல் அட்டவணைகள் எச், எச்.1, எக்ஸ்-ல் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்தகங்களிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்படும், இன்றைய நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது மருந்து ஆய்வாளர் ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்கள் கண்டறியப்பட்டால், அந்த மருந்தகங்களின் உரிமையாளர் மீது, அந்த உத்தரவை பின்பற்றாத காரணத்துக்காக உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story