குமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிப்பு அதிகாரி ஆய்வு


குமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
x

குமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

ஆய்வு

குமாி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கண்காணிப்பு அதிகாரியும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஆணையருமான ஜோதி நிர்மலா தலைமை தாங்கினார். கலெக்டர் அரவிந்த் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா கேட்டறிந்தார்.

மேலும் பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்துக்கு கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா நேரில் சென்றார். இ-சேவை மைய செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.


Next Story