குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள்


குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள்
x

பழனி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்

பழனி அருகே மானூர் கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக இங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் 3 குரங்குகள் சுற்றி திரிகின்றன. அவை குடியிருப்பு பகுதியில் வரும்போது வீட்டில் உள்ள உணவு பொருட்களை எடுத்துவிட்டு செல்கின்றன. அப்போது யாரேனும் அதை விரட்டினால், கடிக்க வருவது போன்று அவர்களை அச்சுறுத்துகின்றன. குரங்குகள் அச்சுறுத்தலால் தெருக்களில் நடந்து செல்லவே குழந்தைகள், பெண்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே மானூரில் உள்ள விளைநிலங்களில் குரங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே மானூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story