மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட போலீசாரின் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட போலீசாரின் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் போலீஸ் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி, மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும், புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன? நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கலந்தாய்வும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க அனைத்து போலீஸ் நிலைய போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்த 15 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார். அதனை தொடர்ந்து போலீஸ் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீசாரின் வாகனங்களையும் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story