மொபட் நிறத்தை மாற்றி பதிவு சான்று-நிரந்தர மக்கள் கோர்ட்டு மூலம் தீர்வு


மொபட் நிறத்தை மாற்றி பதிவு சான்று-நிரந்தர மக்கள் கோர்ட்டு மூலம் தீர்வு
x

மொபட் நிறத்தை மாற்றி பதிவு சான்று வழங்கிய விவகாரத்தில் நிரந்தர மக்கள் கோர்ட்டு மூலம் தீர்வு காணப்பட்டது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை பெருமாள்புரம் ஜெபா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் 11-ந்தேதி, தன்னுடைய மனைவி பெயரில் மொபட் வாங்கினார். அதற்குரிய பதிவு சான்றிதழில் கருப்பு நிற மொபட் என்பதற்கு பதிலாக 'சில்வர்' நிற மொபட் என தவறாக பதிவு சான்று வழங்கி விட்டனர். இதை மாற்றித்தருமாறு கேட்டு பலன் இல்லை.

இதுதொடர்பாக டாக்டர் ஸ்ரீதரன், நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி சமீனா இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தனியார் வாகன விற்பனை ஊழியர்களை அழைத்து விசாரணை நடத்தினார்.

பின்னர் கட்டணம் செலுத்தி பதிவு சான்றிதழ் திருத்தம் செய்து கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அந்த திருத்தம் செய்யப்பட்ட பதிவு சான்றை நீதிபதி சமீனா நேற்று டாக்டர் ஸ்ரீதரனிடம் வழங்கினார்.


Next Story