மரத்தில் மொபட் மோதி வாலிபர் சாவு
மரத்தில் மொபட் மோதி வாலிபர் இறந்தார்.
காட்டுப்புத்தூர்:
நாமக்கல் மாவட்டம் எம்.மேட்டுப்பட்டி சிலோன் அகதிகள் முகாமில் வசித்து வருபவர் சந்திரகுமார். இவரது மகன் சந்தோஷ்குமார்(வயது 20). இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவரும், சிலோன் அகதிகள் முகாமில் வசித்து வரும் சுப்பிரமணியனின் மகன் மணிகண்டனும்(21) ஒரு மொபட்டில் வேலைக்கு சென்றுவிட்டு, நாமக்கல்லில் இருந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள வாழ்வேல்புத்தூர் அருகே வந்துள்ளனர். அப்போது மணிகண்டன் ஓட்டி வந்த மொபட் அவரது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில் மணிகண்டன் மற்றும் மொபட்டில் பின்னால் அமர்ந்து வந்த சந்தோஷ்குமார் ஆகியோர் பலத்த காயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சந்தோஷ்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.