மொபட் திருட்டு


மொபட் திருட்டு
x

சங்கராபுரம் அருகே மொபட்டை திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே ராமராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி ஆனந்தி (வயது 27). இவர் தனது மொபட்டை கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கி அருகே நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்துபார்த்தபோது, மொபட்டை காணவில்லை. அதனை மர்மநபர் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story