தி.மலை: ஆரணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஆரணியில் நெசவாளர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டுக்கு பெயர் எடுத்த ஊரான ஆரணியில் நெசவாளர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விசைத்தறி பட்டால், கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். விசைத்தறி பட்டு உற்பத்தியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
மேலும், அவர்கள் ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பாக மனு அளித்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story