பள்ளி மாணவ- மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்
மயிலாடுதுறையில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.
காலை உணவு வழங்கும் திட்டம்
மயிலாடுதுறை கூறைநாடு கவிஞர் வேதநாயகம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு உணவுகளை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார். ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கலெக்டர் லலிதா பேசினாா். அப்போது அவர் கூறியதாவது:-மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சியில் 11 நகராட்சிப் பள்ளிகளில் 395 மாணவ- மாணவிகளுக்கும், சீர்காழி நகராட்சியில் 7 நகராட்சிப் பள்ளிகளில் 176 மாணவ- மாணவியர்களுக்கும் என மொத்தம் 18 நகராட்சிப் பள்ளிகளில் 571 மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என கூறினாா்.
உணவு சாப்பிட்டனர்
தொடர்ந்து கலெக்டர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாணவ- மாணவிகளுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரிசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை நகரசபை தலைவர் செல்வராஜ், ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, உதவி கலெக்டர் யுரேகா உள்ளிட்ட பலர் கலந்து கொணடனர்.