மார்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
மார்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைத்துள்ளனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள மார்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி தொடர்ந்து பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்த வருடமும் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று 100 சதவீதம் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளியில் முதல் இடம் மாணவி சுகந்தி 492 மதிப்பெண்ணும், இரண்டாம் இடம் மாணவர் முகமது இர்பான் 481 மதிப்பெண்ணும், மூன்றாம் இடம் மாணவி தாரா 479 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் இளந்தென்றல், முதல்வர் மதியழகன் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story