கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக புகார்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பல்லடம், திருப்பூர், கோவை பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், பல்லடம் பகுதியை சேர்ந்த சிவகுமார் தரப்பினர், தங்களுக்கு விசைத்தறி கூடம் இருப்பதாகவும், தொழில் வளர்ச்சிக்கு பணம் தேவைப்படுகிறது. உங்களுடைய ஆவணங்களை கொடுத்தால் வங்கியில் கடன் பெற்றுக்கொள்வதாகவும், அதற்கு பதிலாக தொழிலில் பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாகவும் கூறி எங்கள் ஆவணங்களை பெற்று வங்கியில் கடன் பெற்றனர். ஆனால் கடன் பெற்ற பின்னர் எங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. இதுபோல் சிலரிடம் வங்கிக்கடன் பெற்றுக்கொடுப்பதாக கூறி ஆவணங்களை பெற்று ஏமாற்றியுள்ளனர். கோடிக்கணக்கில் மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், மனு ஏற்பு ரசீது பதிவும் செய்துள்ளனர். மேல்நடவடிக்கை இல்லை. தற்போது எங்களை மிரட்டி வருகிறார்கள். எங்களுடைய ஆவணம் மற்றும் பணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.