டிரோன், படகுகள் மூலம் கொசுக்கள் ஒழிப்பு - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

டிரோன், படகுகள் மூலம் கொசுக்கள் ஒழிப்பு - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
x

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில், கொசு ஒழிப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில், கொசு ஒழிப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள 4,133 தெருக்களில் வாகனங்கள் மற்றும் கையினால் இயக்கும் எந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்புப் புகைபரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 144 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு நீர்நிலைகளுக்கு அனுப்பப்பட்டது.

கடந்த 3 நாட்களில் மழைநீர் வடிகால்களில் 817 கி.மீ நீளத்திற்கு கொசுக்கொல்லி நாசினி தெளித்தும், 829 கி.மீ நீளத்திற்கு கொசு ஒழிப்பு புகைபரப்பியும், 10,723 தெருக்களில் கொசு ஒழிப்புப் புகைபரப்பியும், நீர்நிலைகளில் 208.85 கி.மீ. நீளத்திற்கு டிரோன் மற்றும் படகுகள் மூலம் கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 231 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு நீர்நிலைகளுக்கும் அனுப்பப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story