தாய்மார்களுக்கு தாய்-சேய் நலப்பெட்டகம்
தாய்மார்களுக்கு தாய்-சேய் நலப்பெட்டகத்ைத மேயர் இந்திராணி வழங்கினார்.
மதுரை,
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அதில் உள்நோயாளிகள் மற்றும் வெளிப்புற நோயாளிகளுக்கு மருத்துவ சேவை, தாய்சேய் நலம், தொற்று நோய் தடுப்பு பணி, மக்களை தேடி மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நரிமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் ரூ.45 லட்சம் செலவில் கட்டப்பட்டது. மேலும் அந்த கட்டிடத்தில் பிரசவம் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதன்படி அங்கு பிரசவித்த தாய்மார்களுக்கு தாய்-சேய் நலப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன. மேயர் இந்திராணி, கமிஷனர் பிரவீன் குமார் ஆகியோர் வழங்கினர். இங்கு பிரசவம் பார்க்கும் பணிகள் தொடங்கி உள்ளதால் நரிமேடு, ஜம்புராபுரம் மார்க்கெட் மற்றும் அந்த பகுதியை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் பலன் அடைவார்கள்.