தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்று தாய் தற்கொலை


தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்று தாய் தற்கொலை
x

தகாத உறவால் பிறந்த குழந்தையை தண்ணீர் டிரம்மில் முக்கி கொன்ற தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

செந்துறை அருகே கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 27). இவரது கணவர் இறந்து 9 ஆண்டுகளான நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அங்கு தகாத பழக்கம் ஏற்பட்டு ராஜேஸ்வரி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து பிரசவத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேஸ்வரி கொடுக்கூர் கிராமத்துக்கு வந்துள்ளார். பின்னர் அவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தநிலையில் குழந்தைக்கு யார் காரணம்? என அவரது உறவினர்கள் தொல்லை செய்ததால் ராஜேஸ்வரி கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று ராஜேஸ்வரி தனது 4 மாத கைக்குழந்தையை தண்ணீர் டிரம்மில் முக்கி கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே இருந்த முந்திரி காட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குவாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ராஜேஸ்வரி மற்றும் 4 மாத குழந்தையின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story