தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை
மேலூர் அருகே நோய் கொடுமையால் தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அட்டபட்டிகோவில்பட்டியை சேர்ந்தவர் சுப்பம்மாள் (வயது 65). இவருடைய மகள் பாண்டியம்மாள் (40). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரை சேர்ந்த செல்லம் என்பவருக்கும் பாண்டியம்மாளுக்கும் திருமணம் நடந்தது.
அப்போது சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்து பாண்டியம்மாள் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதித்து நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் மனமுடைந்து இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இருவரும் வீட்டுக்கு உள்ளேயே இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் கீழவளவு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று இரவு சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அங்கு 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.