ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தாய் பலி


ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தாய் பலி
x

ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தாய் இறந்தார்.

அரியலூர்

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேல குடியிருப்பை சேர்ந்த மோகன்பாபுவின் மனைவி ஜெயந்தி(வயது 42). இவர்களது மகள் ஜெயபாரதி(19). இவர்கள் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஸ்கூட்டரில் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

வி.கைகாட்டியை அடுத்த கயர்லாபாத் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது, திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் விளாங்குடியில் இருந்து வி.கைகாட்டி நோக்கி விளாங்குடி காலனி தெருவை சேர்ந்த அய்யப்பன்(19) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஜெயபாரதி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருந்த ஜெயந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் ஜெயபாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த அய்யப்பன், மணிவாசகன்(22) ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து ஜெயந்தியை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஜெயந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கயர்லாபாத் போலீசில் ஜெயபாரதி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Related Tags :
Next Story