மருமகள் பிரிந்து சென்றதால் மாமியார் தற்கொலை


மருமகள் பிரிந்து சென்றதால் மாமியார் தற்கொலை
x

ராஜபாளையத்தில் மருமகள் பிரிந்து சென்றதால் மாமியார் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 55). இவர் அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரும் மருமகள் ரேவதி என்பவரும் குழு மூலம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது பூ வியாபாரத்தில் போதுமான வருமானம் இல்லாததால் கடன் வாங்கிய இடத்தில் பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் மருமகள் ரேவதி, தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து மாரியம்மாள் மனவேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையி்ல் இவர் திடீரென தூக்கமாத்திரை சாப்பிட்டார். உடனே மாரியம்மாளை அவரது மகன் ஈஸ்வரன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைச்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story