2 குழந்தைகளுடன் தாய் மாயம்
2 குழந்தைகளுடன் தாய் மாயம் ஆனார்.
தரகம்பட்டி அருகே உள்ள மேட்டூரை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகள் கல்பனா (வயது 28). இவருக்கும், கிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு மித்ரன் (8) என்ற மகனும், தன்சிகா (6) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தனிதனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று காலை தனது தந்தை வீட்டில் இருந்து கல்பனா, மித்ரன், தன்சிகாவை அழைத்து கொண்டு வெளியே சென்றார். பின்னர் மாலை நீண்டநேரம் ஆகியும் 3 பேரும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து கல்பனாவின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் 3 பேரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கல்பனாவின் தந்தை காமராஜ் கொடுத்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான கல்பனா, மித்ரன், தன்சிகா ஆகியோரை தேடி வருகின்றனர்.