பண்ருட்டி அருகே 4 குழந்தைகளின் தாய் தற்கொலை


பண்ருட்டி அருகே 4 குழந்தைகளின் தாய் தற்கொலை
x

பண்ருட்டி அருகே மதுபோதையில் கணவர் தகராறு செய்ததால் 4 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள புலவன்குப்பத்தை சேர்ந்தவர் அய்யப்பன். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா(வயது 32). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். அய்யப்பன் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.

இதனால் மனமுடைந்த வனிதா, வீட்டு தோட்டத்தில் உள்ள மாட்டு கொட்டையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வனிதாவின் தந்தை வேலுசாமி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story