4 மாத குழந்தையின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை


4 மாத குழந்தையின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
x

தானிப்பாடி அருகே 4 மாத குழந்தையின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி கலெக்டர் மந்தாகினி விசாரணை நடத்தி வருகிறார்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

தானிப்பாடி அருகே 4 மாத குழந்தையின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி கலெக்டர் மந்தாகினி விசாரணை நடத்தி வருகிறார்.

தூக்குப்போட்டு தற்கொலை

தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகில் உள்ள மலமஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவரது மனைவி சிவரஞ்சனி (26). இவர்கள் இருவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி சதீஷ்குமார் வேலை விஷயமாக வெளியில் சென்று இருந்தார்.

அன்று மாலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது சிவரஞ்சனி வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் தானிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதவி கலெக்டர் விசாரணை

இறந்த சிவரஞ்சனிக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் மட்டுமே ஆவதால் சிவரஞ்சனியின் தற்கொலைக்கு காரணம் குறித்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story