ஓடும் பஸ்சில் இருந்து குதித்து 5 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை: ஊராட்சி துணை தலைவர் உள்பட 2 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஓடும் பஸ்சில் இருந்து குதித்து  5 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை: ஊராட்சி துணை தலைவர் உள்பட   2 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

ஓடும் பஸ்சில் இருந்து குதித்து 5 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை: ஊராட்சி துணை தலைவர் உள்பட 2 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் நாகலட்சுமி (வயது 28). இவருக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வந்தார். நாகலட்சுமி மையிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளராக பணியாற்றினார். கலெக்டர் உத்தரவுப்படி நேரடியாக நாகலட்சுமி பணியில் சேர்ந்ததால் மையிட்டான்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் பாலமுருகன், வார்டு கவுன்சிலர் வீரக்குமார், ஊராட்சி செயலாளர் முத்து ஆகியோர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் மீது மதுரை மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு அரசு டவுன் பஸ்சில் வந்தபோது, திடீரென ஓடும் பஸ்சில் இருந்து நாகலட்சுமி மட்டும் திடீரென குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

இவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு மேற்கண்ட 3 பேர் தான் காரணம் என கூறியிருந்தார். இதன்படி அந்த 3 பேர் மீது கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அவர்கள் 3 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

அவர்களில் ஊராட்சி துணைத் தலைவர் பாலமுருகன், வார்டு கவுன்சிலர் வீரக்குமார் ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு செய்தனர்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, 5 பெண் குழந்தைகளுக்கு தாயான பெண்ணின் சாவுக்கு மனுதாரர்கள் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு முன் ஜாமீன் அளிக்கக்கூடாது. இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி இருவரின் முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story