தாய்-மகன் தற்கொலை மிரட்டல்
தாய்-மகன் தற்கொலை மிரட்டல்
திண்டுக்கல்
செம்பட்டி அருகே அக்கரைப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் சாலை அமைக்கும் பணி நேற்று நடந்தது. அப்ேபாது பொக்லைன் எந்திரம் மூலம் ஜல்லிக்கற்கள் கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி, அவரது மகன் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பொக்லைன் எந்திரம் முன்பு விழந்த தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து தகவல் அறிந்த ஆத்தூர் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story