குழந்தையுடன் தாய் மாயம்


குழந்தையுடன் தாய் மாயம்
x
தினத்தந்தி 4 July 2023 1:04 AM IST (Updated: 4 July 2023 5:36 PM IST)
t-max-icont-min-icon

குழந்தையுடன் தாய் மாயமானார்.

திருச்சி

தென்னூர்,

திருச்சி தென்னூர் வாமடம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவருடைய மகள் லோகேஸ்வரி (வயது 21). இவர் சம்பவத்தன்று அதிகாலை தனது 1½ வயது குழந்தை ஹேராம்குமரனை தூக்கி கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாததால் ஈஸ்வரி தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையுடன் மாயமான தாய் லோகேஸ்வரியை தேடி வருகிறார்கள்.


Next Story