குழந்தையுடன் தாய் மாயம்


குழந்தையுடன் தாய் மாயம்
x

குழந்தையுடன் தாய் மாயம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

ஆதனக்கோட்டை அருகே வளவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கவுசல்யா (வயது 27). இவர்களுக்கு ரோகித் (8) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று கவுசல்யாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் தனது மகன் ரோகித்தை அழைத்துக்கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து முருகேசன் ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி வழக்குப்பதிவு செய்து தாய்-மகனை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story