பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை பிறப்பு பெருவிழா30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை பிறப்பு பெருவிழா30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x

பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை பிறப்பு பெருவிழா வருகிற 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தஞ்சாவூர்

பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை பிறப்பு பெருவிழா வருகிற 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பூண்டி மாதா பேராலயம்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம். பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று புகழப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. வரும் 30-ந் தேதி (புதன்கிழமை) அன்னையின் பிறப்பு பெருவிழா தொடக்கமாக கொடியேற்று நிகழ்வு நடைபெறுகிறது. அப்போது அன்னையின் உருவம் வரையப்பட்ட திருக்கொடி கோவிலின் முன்புறமுள்ள கொடி மரத்தில் ஏற்றப்படும்.

திருப்பலி

கொடியேற்று விழாவில் கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

கொடியேற்றத்தை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலை திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. வருகிற 31-ந் தேதி மரியா -இறை நம்பிக்கையின் நங்கூரம் என்ற தலைப்பில் அரிமளம் பங்குத்தந்தை தஞ்சை டோமி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

தேர்பவனி

அதைத்தொடர்ந்து 1-ந் தேதி மரியா- சீடத்துவத்தின் அடையாளம் என்ற தலைப்பில் திருச்சி புதிய வளனார் கல்லூரி அதிபர் பவுல்ராஜ் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

தொடர்ந்து விழா நாட்களில் திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரி அதிபர் ஆன்ட்ரூ டி ரோஸ், கும்பகோணம் கல்வி மற்றும் திட்டப்பணி குழு செயலாளர் கஸ்பார், திருச்சி மறை மாவட்ட பொருளாளர் ஜேம்ஸ் செல்வநாதன், திருச்சிலுவை சபை தமிழக மறை மாநில தலைவர் ஜோசப் கஸ்பார், அம்மாப்பேட்டை பங்குத்தந்தை ஜோஜோ லாரன்ஸ், கும்பகோணம் மறை வட்ட முதன்மை குரு பிலோமின்தாஸ் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றுகின்றனர்.

அதனை தொடர்ந்து அன்னையின் பிறப்பு நாளாக கருதப்படும் 8-ந் தேதி மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி, இரவு 8.30 மணி அளவில் தேர்பவனியை தொடங்கி வைக்கிறார்.

ஏற்பாடுகள்

9-ந் தேதி விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story