இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்: உல்லாசமாக இருக்கும் போது இடையூறு கள்ளகாதலனுடன் தாய் செய்த கொடூரம்...!
தான் குடியிருந்த வீட்டில் கீழ் தளத்தில் இருந்த கார் ஓட்டுநருடன் மணிகண்டன் என்பவருடன் கள்ளக்காதல் இருப்பதை அறிந்து செல்வ பிரகாசம் பிரிந்து சென்றார்.
சென்னை,
சென்னை மாங்காடு அருகே கிருகம்பாக்கத்தை சேர்ந்தவர் (லாவண்யா) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் கடந்த 6ம் தேதி தன்னுடைய 2 வயது ஆண் குழந்தை சர்வேஸ்வரன் வலிப்பு வந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் உயிரிழந்துவிட்டதாக கூறினார்.
இதற்கிடையில் தனது குழந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக லாவண்யாவின் முதல் கணவர் செல்வ பிரகாசம் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
விசாரணையில் "செல்வ பிரகாசம் - லாவண்யா தம்பதிக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு சர்வேஸ்வரன் என்ற குழந்தை இருந்தது. லாவண்யாவிற்கு, தான் குடியிருந்த வீட்டில் கீழ் தளத்தில் இருந்த கார் ஓட்டுநருடன் மணிகண்டன் என்பவருடன் கள்ளக்காதல் இருப்பதை அறிந்து செல்வ பிரகாசம் பிரிந்து சென்றார். இதனையடுத்து, மணிகண்டனை திருமணம் செய்து லாவண்யா தனது குழந்தையுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 6ம் தேதி வலிப்பு ஏற்பட்டு குழந்தை கீழே விழுந்து இறந்துவிட்டதாக தெரிவித்த நிலையில், பிரேத பரிசோதனையில் குழந்தைக்கு தலையில் பல்வேறு பகுதியில் காயம் இருப்பதாக தெரிய வந்தது.
கடந்த மாதம் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த நிலையில், கணவனுக்கு தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்துள்ளார். தனது குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகாரளித்த தந்தை விசாரணையில், குழந்தையின் தாய் கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகியது.
இதையடுத்து வழக்கு கொலை வழக்காக மாற்றி லாவண்யா மற்றும் அவரது இரண்டாவது கணவர் மணிகண்டனை மாங்காடு போலீசார் கைது செய்தனர்.
இருவரும் உல்லாசமாக இருக்கும் போது குழந்தை அடிக்கடி அழுததால் அதனை குழந்தையை கடித்து, அடித்து கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.