நெடுஞ்சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

நெடுஞ்சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x

சுவாமிமலை அருகே நெடுஞ்சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்தாா். அவரது உறவினர் படுகாயம் அடைந்தாா்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

சுவாமிமலை அருகே நெடுஞ்சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்தாா். அவரது உறவினர் படுகாயம் அடைந்தாா்.

கட்டிட தொழிலாளர்கள்

சுவாமிமலை அருகே உள்ள கல்லூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பாலன். இவருடைய மகன் முருகன்(வயது35). இவரது உறவினர் திருப்பாலைத்துறையை சேர்ந்த கார்த்தி என்ற பாரதிதாசன் (32). கட்டிட தொழிலாளர்களான இவர்கள் இவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் அசூர் பைபாஸ் சாலை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தனா்.

பரிதாப சாவு

அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி நெடுஞ்சாலை தடுப்பு சுவரின் மீது மோதியது. இதில் கார்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற முருகன் படுகாயமடைந்து கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாா். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து தகவல் அறிந்த சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story