மோட்டாா் சைக்கிள்களை சேதப்படுத்தி வாலிபா் மீது தாக்குதல்


மோட்டாா் சைக்கிள்களை சேதப்படுத்தி வாலிபா் மீது தாக்குதல்
x

அம்மாப்பேட்டை அருகே மோட்டாா் சைக்கிள்களை சேதப்படுத்தி வாலிபா் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை;

அம்மாப்பேட்டை அருகே மோட்டாா் சைக்கிள்களை சேதப்படுத்தி வாலிபா் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில் திருவிழாவில் தகராறு

அம்மாப்பேட்டை அருகே குளிச்சப்பட்டு கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் அருண்ஆதவன் (வயது21). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அந்தப் பகுதியில் நடந்த அய்யனார் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த குளிச்சப்பட்டு மேலத்தெருவை சேர்ந்த நடராஜன் மகன் வெற்றி வீரராகவன் (வயது 34) என்பவருக்கும் அருண் ஆதவனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.சம்பவத்தன்று வெற்றிவீரராகவன், அவரது தம்பி பாண்டியன்(32), வெற்றி வீரராகவனின் தந்தை நடராஜன் (55) மற்றும் குளிச்சப்பட்டு கீழத்தெருவை சேர்ந்த செல்லப்பா(55) உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து அருண்ஆதவனின் வீட்டுக்கு சென்று அவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த 3 மோட்டார் சைக்கிள்களை உடைத்து சேதப்படுத்தி, அருண் ஆதவன் வீட்டு முன் பக்க கண்ணாடிகளையும் உடைந்து சேதப்படுத்தினர்.

வழக்குப்பதிவு

இதை தட்டிக் கேட்ட அருண் ஆதவன் தலையில் தாக்கி காயப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். தாக்குதலில் காயமடைந்த அருண் ஆதவன் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அருண் ஆதவன் கொடுத்த புகாரின் பேரில் வெற்றி வீரராகவன், பாண்டியன், நடராஜன், செல்லப்பா ஆகியோர் மீது அம்மாப்பேட்டை போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைப்போல அருண்ஆதவன் மீது வெற்றிவீரராகவன் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாா். இதன் பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story