மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

பாபநாசத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

பாபநாசம்;

பாபநாசம் மேலரஸ்தா தெருவை சேர்ந்தவா் ராமசாமி (வயது44). சம்பவத்தன்று இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டுப்போய் இருந்தது. இது குறித்து ராமசாமி பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடியதாக ராஜகிரி கரைமேட்டு தெருவை சேர்ந்த பிரபாகரன் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story