மோட்டார் திருடிய 2 பேர் கைது


மோட்டார் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் திருடிய 2 பேர் கைது

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே உள்ள ஞானதாசபுரம் நரிப்பாலம் பகுதியில் ஜேம்ஸ் என்பவரின் தோட்டத்தில் இருந்த தண்ணீர் மோட்டார் திருட்டு போனது. இதுபற்றி பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் விசாரணை நடத்தினார். அப்போது குலசேகரம் அரியங்கோடு பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 37) மற்றும் குளத்துவிளை பகுதியை சேர்ந்த கோபி (49) ஆகியோர் திருடியதாக தெரிய வந்தது. அதன்பேரில் 2 பேரையும் கைது செய்து மோட்டாரை மீட்டனர்.


Next Story