மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி
சங்கராபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி
மூங்கில்துறைப்பட்டு
சங்கராபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் 75-வது சுதந்திரதின விழாவை கொண்டாடும் வகையில் தேசியக்கொடி ஏற்றுவது குறித்து மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டுறவு பிரிவு மாநில இணை செயலாளர் இந்தியன் துரைவேல், ஒன்றிய பொதுச்செயலாளர் செல்வராஜ் மாவட்ட நலத்திட்ட செயலாளர் பார்த்திபன், ஒன்றிய பொருளாளர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூங்கில்துறைப்பட்டு பா.ஜ.க. தலைவர் ஏழுமலை வரவேற்றார்.
மூங்கில்துறைபட்டில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது கள்ளக்குறிச்சிசாலை, இளையாங்கண்ணி கூட்டுரோடு, சவேரியார்பாளையம், மைக்கேல்புரம், மேல்சிறுவள்ளூர், திருவண்ணாமலை சாலை வழியாக மீண்டும் மூங்கில்துறைப்பட்டை வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு தேசிய கொடியை ஏற்றுவது குறித்தும், சுதந்திர தினத்தை அனைவரும் கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 20 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பேரணியில் பா.ஜ.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.