மோட்டார்சைக்கிள்-கார் நேருக்கு நேர் மோதல்: தங்கும் விடுதி மேலாளர் பலி


மோட்டார்சைக்கிள்-கார் நேருக்கு நேர் மோதல்:   தங்கும் விடுதி மேலாளர் பலி
x

போடி அருகே மோட்டார்சைக்கிள் கார் நேருக்குநேர் மோதிய விபத்தில் தங்கும் விடுதி மேலாளர் பரிதாபமாக இறந்தார்

தேனி

போடி அருகே உள்ள மஞ்சிநாயக்கன்பட்டி கருப்பையா தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 29). தனியார் தங்கும் விடுதி மேலாளர். இவர் சங்கராபுரத்தில் இருந்து டொம்புச்சேரிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காளவாசல் அருகே சென்றபோது எதிரே தேனியில் இருந்து வந்த கார் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயக்குமாரின் மனைவி பவித்ரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story