டிரைவரிடம் மோட்டார் சைக்கிள்-செல்போன் பறிப்பு
டிரைவரிடம் மோட்டார் சைக்கிள்-செல்போன் பறித்து சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநெல்வேலி
நெல்லை அருகே உள்ள தருவை பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி மகன் பால் மாரியப்பன் (வயது 35). டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் மருதம்நகர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்மநபர்கள் 2 பேர் பால் மாரியப்பனை வழிமறித்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் ரூ.250 ஆகியவற்றை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பால் மாரியப்பன் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது சற்று தூரத்தில் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் விட்டு சென்றது தெரியவந்தது. இதனை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து போலீசார் மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story