கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ரெட்டிமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் கண்ணன் (வயது 25). இவர் அங்குள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் தனது மோட்டார் சைக்கிளில் திருப்பூரில் உள்ள தனது அண்ணனை பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது தென்னிலை அருகே எல்லைக்காட்டு வலசு பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த ஒரு கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கண்ணன் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கண்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தென்னிலை சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.