லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வேன் டிரைவர் சாவு


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வேன் டிரைவர் சாவு
x

கரூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வேன் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

கரூர்

வேன் டிரைவர் பலி

கரூர் அருகே உள்ள புலியூர் கணேசபுரத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 56). வேன் டிரைவர். இவர் புலியூர் ஆசிரியர் காலனி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த மினிலாரி டிரைவர் எந்தவித சிக்னலும் இல்லாமல் இடதுபுறமாக திரும்பியுள்ளார்.அப்போது எதிர்பாராதவிதமாக குருசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட குருசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் குருசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story