சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி


சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
x

சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலியானார்.

புதுக்கோட்டை

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் திருநாகேஸ்வரம் அந்தமங்கலம் மேல தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் மாரியப்பன் (வயது 32). இவர் சரக்கு வேனில் தஞ்சாவூர்- புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். கூழையன்விடுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி அருகே வந்த போது சரக்கு வேன் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து கிடந்துள்ளது. இதையடுத்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் கோட்டையூர் அம்பலக்காரர் தெருவை சேர்ந்த அப்துல் அஜீஷ் மகன் மன்சூர் அலி (28) என்பவர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது மன்சூர் அலி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்து கிடந்த சரக்கு வேன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மன்சூர் அலி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டிவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மன்சூர் அலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வேன் டிரைவர் மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story