லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - ஒருவர் பலி


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - ஒருவர் பலி
x

திருவையாறு அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர்


தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்கடை பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது.இவரது மகன் முகமது அம்ஜத் (வயது22). இவர் சி.சி.டி.வி கேமரா பொருத்தும் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் ரியாஸ் அகமது (20).

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு தஞ்சையில் வேலையை முடித்து விட்டு அதிகாலையில் நடுக்கடை நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்துள்ளனர்.அப்போது அரசூர் அருகே வந்த போது எதிரே வந்த லாரி மீது எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முகமது அம்ஜத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அருகில் இருந்தவர்கள் ரியாஸ் அகமதுவை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நடுக்காவேரி போலீசார் விரைந்துசென்று, முகமது அம்ஜத்தின் உடலைக் கைப்பற்றி, பிரேதபரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story