மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; முதியவர் பலி
சாத்தான்குளம் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக பலியானார். மேலும் 2 கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.
டீக்கடைக்கு சென்றார்
சாத்தான்குளம் அருகே ஆலங்கிணறு சென்னிவீரன்தட்டு ஓத்தவீட்டைச் சேர்ந்தவர் மு. வேலையா (வயது 70). முன்னாள் திமுக கிளை செயலரான இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். மனைவியும், பிள்ளைகளும் வெளியூரில் உள்ளனர். நேற்று காலையில் அவர் ஆலங்கிணறு விலக்கில் உள்ள டீக்கடைக்கு மொபட்டில் சென்றார். அங்கு டீ குடித்து விட்டு மீண்டும் மொபெட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கல்லூரி மாணவர்களான சின்னமாடன்குடியிருப்பு சுடலைமணி மகன் அரவிந்த் (20), அம்பலசேரி முத்துராஜ் மகன் நவீன்ராஜ் (21) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் நெல்லை மாவட்டம் கள்ளிக்குளம் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிள் மோதியது
ஆலங்கிணறு விலக்கில் வந்தபோது வேலையா ஓட்டி வந்த மொபட் மீது மாணவர்கள் ஓட்டிவந்த மோட்டார் ைசக்கிள் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. இதில் மொபட்டிலிருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த வேலையா ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த அரவிந்த், நவீன்ராஜ் இருவருக்கும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
போலீசார் விசாரணை
இகுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீசார் வேலையா உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.