பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து ெதாழிலாளி பலி
கீழ்பென்னாத்தூர் அருகே பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கார்ணாம்பூண்டியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 43). கூலித் தொழிலாளி.
இவர் நேற்று இரவு கஸ்தம்பாடியில் உடல்நிலை சரியில்லாமல் உள்ள தனது சகோதரி மகனை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
கழிக்குளம்- ஐங்குணம் செல்லும் சாலையில் சாலைேயாரம் பாலம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.
பள்ளத்தில் விழுந்து பலி
கனகராஜ் அந்த வழியாக சென்றபோது அங்கு ேதாண்டப்பட்ட பள்ளத்தில் திடீரென மோட்டார்சைக்கிளுடன் விழுந்துள்ளார். இதில் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.