மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி


மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி
x

பேரணாம்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

வேலூர்

பேரணாம்பட்டு டவுன் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இதயசந்திரன் (வயது 46). இவர் கர்நாடகா மாநிலத்தில் தனியா கோழிப்பண்ணை நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்ததும், பேரணாம்பட்டிலுள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

தமிழக எல்லையான பேரணாம்பட்டு அருகே பத்தலப் பல்லி மலைப்பாதை முதல் வளைவில் வந்தபோது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இதயசந்திரன் படுகாயமடைந்தார். உனடியாக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த இதயசந்திரனுக்கு மனைவி சுமதி, மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.


Next Story