பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி
பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி
பூதலூர் அருகே பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் இறந்தார். மேலும் நண்பர் படுகாயமடைந்தார்.
மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள சித்திரக்குடி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 24). இவரும், அவரது நண்பர் அதே தெருவை சேர்ந்த நெல்சன்(25) ஆகிய 2 பேரும் செங்கிப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை பார்த்திபன் ஓட்டினார். நெல்சன் பின்னால் அமர்ந்து இருந்தார். பூதலூர் செங்கிப்பட்டி சாலையில் தனியார் பண்ணை சிறிய பாலத்தின் அருகே உள்ள பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது.
நண்பர் படுகாயம்
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் படுகாயமடைந்த நெல்சன் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பூதலூர் போலீஸ் நிலையத்தில் நெல்சன் கொடுத்த புகாரின் பேரில் பூதலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.