மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்


தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 38). சம்பவத்தன்று இவர் சிதம்பநகர் பகுதியில் மோட்டர் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்த போது யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டது தெரிய வந்தது.

இதே போன்று பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள ஒரு மோட்டார் வாகன சர்வீஸ் மையத்தில் நிறுத்தி இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்று விட்டார்.

2 வாலிபர்கள் கைது

இதுகுறித்த புகார்களின் பேரில் தென்பாகம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தூத்துக்குடி மேல ஆத்தூரை சேர்ந்த செல்வகுமார் மகன் அஜித் (23), டி. சவேரியார்புரத்தை சேர்ந்த செல்லையா மகன் செல்வராஜ் (23) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிள்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அஜித், செல்வராஜ் ஆகிய 2 பேரையும் மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் மீட்டனர்.


Next Story